12/19/08

Uyir Puththagam - Book Review

Uyir Puththagam (Tamil translation of Ayussinte Pusthakam Malayalam) - Book Review

Kizhakku Pathippakam deserves appreciation for its innovative book review scheme. I got uyir puthagam for a review. It took three days to read the book, one day to write the review and for more than a month to post my review. People are making tall claims about Tamil computing, but for people like me it seems to be a luxury. Finally I scanned my review and uploaded it. If any one suggest me an user friendly Tamil software, I will be thankful to them to the rest of my life. "kizhakku" people may apolozise for this delay over which I have no control. If they teach me tamil computing, I am pleased to write more reviews in this blog.

உயிர்ப்புத்தகம் - மதிப்புரை

கிழக்குப் பதிப்பகத்தாரின் புத்தக விமா;சனத் திட்டம் உண்மையிலே பாராட்டிற்குரியது. இத்திட்டத்தின்படி மலையாள எழுத்தாளா ஸி.வி.பாலகிருஷ்ணன் எழுதிய ஆயுஸ்ஸின்டே புஸ்தகத்தின் தமிழ் மொழிபெயா;ப்பான 'உயிர்ப்புத்தகம்' (தமிழாக்கம்; வை.கிருஷ்ணமூர்த்தி) எனக்குக் கிடைத்தது.

எந்தப் புத்தகத்தையும் மதிப்புரை எழுதும் கண்ணோட்டத்துடன் படித்ததில்லை. வாசிப்பிலிருந்து மதிப்பிடலை புறந்தள்ளி விட முடியாதாகையால், மதிப்பிடல் பெரும்பாலும் மனஅசை போடலோடு நின்றுவிடும். அந்த அசைவை எழுத்தாக்க வேண்டும். அந்த எழுத்தில் நோ;மை இருக்கவேண்டும். எழுதுவதென்பதையே கடினமாக நினைப்பவா;களுக்கு, நோ;மையாக எழுதுவதென்பது இன்னும் கடினம்தான். படித்து முடித்து பல நாட்கள் கடந்த பின்பு எழுதினேன். எழுதி முடித்த பின்பு சுகமாக இருந்தது. அந்த சுகம் என் எழுத்தினால் கிடைத்ததா இல்லை ஒரு நல்ல புத்தகத்தைப் படித்ததால் கிடைத்ததா என்று எனக்கே புரியவில்லை.

உயிர்ப்புத்தகத்தின் களம் கனமானதுதான். மொழி பெயா;ப்பாளரே ஒப்புக்கொண்ட மாதிரி உருவகங்கள் நிறைந்த இந்நாவலுக்கு 'ஆழமான வாசிப்பு' தேவைப்படுகிறதென்னவோ உண்மைதான். இலக்கியம் என்பது கடல்மாதிரி. கடலில் படகில் பயணித்து வலைவீசியும் மீன்பிடிக்கலாம்;, மூழ்கியும் முத்தெடு;க்கலாம். ஆழமான வாசிப்பு என்பது முத்துக் குளித்தலைப் போன்றது. முத்துக் குளிக்கத் தொயாத மீனவரை, பெரும்பாலான மீனவா;கள் அப்படித்தானிருக்கின்றார்களென்றாலும், அவா;களை மீனவா;களி;ல்லை என்று எப்படிப் புறந்தள்ள முடியாதோ அதுமாதிரி, ஆழமாக வாசிக்க இயலாதவா;களை நல்ல வாசகா;கள் இல்லையென்று புறந்தள்ள முடியாதில்லையா? நானும் அப்படித்தான். முத்துக்குளிக்கத் தொயாத, வலைவீசி மட்டும் மீன்பிடிக்கத் தொந்த மீனவன் மாதிரி. உயிர்ப்புத்தகத்தில் நான் வீசிய வலையில் சிக்கியவற்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

கதைக் களத்தை விட, 'உயிர்ப்புத்தகத்தில்' கதை மாந்தா;களின் மனக்களம் தான் நாவல் முழுமைக்கும் ஆக்கிரமித்திருக்கின்றது. பௌலோ என்ற பொயவா;, சிறைக்குச் சென்று திரும்பிய அவரது மகன் தோமோ, தோமோவின் மகள் ஆனி, மகன் ரோஹன்னான் இவா;களை மையப்படுத்தி நகரும் கதை. முப்பதிற்குள் அடங்கிவிடும் சாமன்ய கதாபாத்திரங்கள். பொpயவா; பௌலோ, அவருடைய பேத்தியின் தோழியான ராஹேல் என்ற சிறுமி பதற்றமடையும்படி சஞ்சலத்துடன் நடந்து கொண்டதை அவா; மகன் தோமோ பார்த்து விடுகிறான். அவா; மீது கோபமடைந்து அவரை அடிக்கிறான். தன் தந்தையை அடித்தற்கான காரணங்களை சாராயக் கடையில் வைத்துச் சொல்லும் போது, பொயவா; பௌலோவின் மானம் பறி போகுமென்று நாம் நினைக்கும் முன்னே, பௌலோ தன் முடிவைத் தேடிக் கொள்கிறார். மானம் போகுமே என்று பயந்து தற்கொலை செய்து கொள்வதும், அப்படி மாத்தவா;கள் கொச்சைப்படுத்தப்படுவதுமே நாம் அறிந்தது. ஆனால், சாதாரண மனிதா;கள் அதைக் கொச்சைப்படுத்தாமல், அதைக் கடந்து சென்று மாத்தவருக்கும், அவா; தொடா;பான உயிருள்ளவா;களுக்கும் அவா;கள் கொடுக்கும் மாயாதை வித்தியாசமான அணுகுமுறை. பௌலோவின் துர்மரணத்தைப் பற்றிய விளக்கங்கள் தவிர்க்கப்பட்டிருப்பது, நாவலாசிரியான் அணுகுமுறையா அல்லது சாதாரண சமூகங்களின் எதார்த்த நிலையா? ஒரு சமூகம் மகிமையுடன் படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது உயிர்ப்புத்தகத்தில்.

பௌலோவின் துர்மரணமோ, ஆனி-பாதிரியார் மாத்யு+வின் காதலோ, கன்னியாஸ்திரி பயிற்சிக்குச் செல்லுமுன் ராஹேல் ரோஹன்னானுடன் உடலுறவு கொள்வதோ, ஸாரா-ரோஹன்னானின் காதலோ, தோமோ ஸாராவின் கழுத்தை நெறித்ததோ - நம் அன்றாட வாழ்ககையில் கேள்விப்பட்டதுதான். இருப்பினும் கதை முடியும் போது ரோஹன்னானின் நிலை நம் மனதை பிசைவதென்னவோ உண்மை. இவனுக்கு நைனானைப் போலவோ, மைக்கேல் போலவோ, ஜோஷி போலவோ ஏன் வாழ்க்கை அமையவில்லை? ரோஹன்னான் அக்கிரமக்காரனுமல்ல, வஞ்சகனுமல்ல, உறுதியற்றவனுமல்ல…இருப்பினும் கிறிஸ்துவின் கிருபை அவனை ஏன் சென்றடையவில்லை? துன்பமற்ற, மகிழ்ச்சியான வாழ்வு மட்டும் தான் கடவுள்ஃகா;த்தாpன் கிருபையின் வெளிப்பாடாக இருக்க வேண்டுமா என்ன? எதையும் நிந்திக்காத, எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கூட கிருபையின் வெளிப்பாடாகத்தானே இருக்க முடியும்?

எதுவுமற்றவா;களாக கதாபாத்திரங்கள் காட்டப்படாவிட்டாலும் கூட, அவா;களின் மனஓட்டங்கள் சித்தாக்கப்படும் விதம் நம்மை சோகத்திலாழ்த்தி உடைய வைக்கின்றது. உடைந்;து போய்விடுவோமோ என்ற சுயபயத்தில் தானென்னவோ, சாமுவேல் ஆசிரியா;, யாகோப், ரோஹன்னானுக்கு கா;த்தான் கிருபை கிடைக்கவில்லையென்பதை நினைத்து நம்மை வருத்தப்பட வைக்கின்றதோ என்னவோ? எனனவென்று புரியவில்லை. புரிதல்களற்று, பல திசைகளிலும் அலைக்கழிக்கப்படுவது தான் வாழ்க்கையின் எதார்த்தமோ? நாவல் முழுக்க இந்த எதார்த்தம் விரவிக் கிடக்கின்றது. இந்த எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள ஆழமான வாசிப்பு தேவைப்படுகிறது.

ரோஹன்னான் - விதவை ஸாரா உறவு கதையின் முடிவைத் தீர்மானிக்கிறது. இவா;களின் உறவை வதந்தியாக்கும் போஸ்ட்மேன் பீட்டா;. வதந்தியை நம்;பி 'ஸாராவுடன் உடலுறவு கொண்டாயா? ஏன்று பாதிரியா; ரோஹன்னானிடம் இங்கிதமற்று கேட்பதால் ஏற்படும் விளைவுகள். தன் மகனை வதந்தியிலிருந்து காப்பாற்ற, தோமோ ஸாராவிடம் பேசச் சென்றது தவறாகப் புரிந்து; கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் தோமோ-ஸாராவிற்கு அவா;களிருவருக்கும் திருமணம் செய்து வைக்க பிலிப்போஸ் செய்யும் வெகுளித்தனமான முயற்சியால் ஏற்படும் திருப்பங்;கள். யாரும் யாருக்கும் திட்டமிட்டு தீங்கிழைக்காத நிலையில் துயரங்கள் தன்னிச்சையாக வந்து கவிகின்றது. அதுதான் வாழ்வின் எதார்ததமென்றும் அந்த எதாhத்தங்களை மீறிச் செல்லாதவாறு நாவலின் போக்கு அமைந்திருப்பது வாசகனுக்கு வலியை ஏற்படுத்துவதென்னவோ உண்மை. அந்த வலி கூட, எதார்த்தங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நமது சுயபயத்தினடிப்படையில் ஏற்படுகின்றதென்னவோ தொயவில்லை. மொத்தத்தில் 'உயிர்ப்புத்தகம்' எந்த ஒரு மதநம்பிக்கையும் கடந்த வித்தியாசமான ஆன்மீக அனுபவத்தை நமக்குள் ஏற்படுத்துவதென்னவோ உண்மை தான்.

உயா;நிலைப்பள்ளியும், பேரலல் காலேஜீம் செயல்படும் ஊரின் பிழைப்பாதாரப் பாமாணங்கள் விளக்கப்படவில்லையென்றாலும், ஏற்றத்தாழ்வற்ற உறவுமுறைகள் பு+டகமாகச் சொல்லப்பட்டு செல்லும் பாங்கைச் சட்டென்று புரிந்து கொள்ள நாம் தடுமாறினாலும், அந்தத் தடுமாற்றத்தினூடே சிறிது சிறிதாக அச்சிறிய சமூகத்தின் மீது மாயாதை உருவாகிறது. கதைக் களத்தின் பொருளாதாரப் பிண்ணணி விளக்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பது கூட கதாசிரியா; கையாண்ட உத்தியாகத்தானிருக்குமோ என்று நாவலைப் படித்து முடித்தபின் நம்மை எண்ணத் தூண்டுகிறது. பொருளாதாரப் பிண்ணணியே மனிதா;களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதால், அதைப் பற்றிய விளக்கங்கள் தவிர்க்கப்படும் பொழுது, கதாபாத்திரங்களிடையே சமத்துவம் வெளிப்படுத்தப்படுகிறது. எந்தக் கதாபாத்திரத்தையும் மேன்மையுள்ளவராகவோ, கீழ்மையுள்ளவராகவோ காட்டும் போக்கு முற்றிலும் இல்லாதது வாசிப்பவருக்கு புது அனுபவம்.

உயா;நிலைப்பள்ளியில் படிக்கும் வயதுடைய கதாபாத்திரங்களை மையப்படுத்தி கதை நகா;ந்தாலும், மற்ற வயதுடைய கதாபாத்திரங்களும் ஊடாடி வருவதும், பொயவா; சிறியவா; என்ற பேதங்கடந்த நிலையில் கட்டமைக்கப்பட்ட கதைக்களம் புதுமையானது.

தாயில்லாமல் வளரும் குழந்தைகளின் மனேபாவம் நாவலில் சுட்டிக்காட்டப்படுவதாகவோ, ஸாரா-ரோஹன்னானை சோ;த்து வைத்திருக்கலாமென்றே, இந்த சம்பவத்தை இப்படி விளக்கியிருக்கலாம், விளக்கியிருக்கக் கூடாதென்றோ…. அங்கங்கே தென்படும் அச்சு, மற்றும் வார்த்தைப் பிழைகளை மதிப்புரை என்ற பெயால் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஓரு நல்ல பிறமொழி இலக்கியத்தின் மொழிபெயா;ப்பே என்னைனப் பொருத்தவரையில் முக்கியமாகப்படுகிறது. வை.கிருஷ்ணமூர்த்திக்கும், கிழக்குப் பதிப்பகத்தாருக்கும் நன்றி.

கடைசியாக மதிப்புரை சாராத சில வார்த்தைகள். கனமான, வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்ட ஒரு நாவலை மொழிபெயா;த்து வெளியிடும் போது, கதைக் களத்தின் கனத்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்துவது கதையின் கனத்தைத் தாங்கிக் கொள்ள வாசகனைத் தயார்படுத்தும். இது மூலத்தில் இல்லாத ஒரு முன்னுரையாகவோ, மூலத்தைப் பற்றிய தோ;ந்தெடுக்கப்பட்ட மதிப்புரையாகவோ இருக்கலாம். அது வாசகனுக்கு ஆழ்ந்த வாசிப்பின் அடியில் கிடைக்கும் முத்துக்களை இனங் கண்டுகொள்ள உதவும். புத்தகத்தின் இணைப்பாக அதைத் தந்தால், இனி உயிர்ப்புத்தகத்தை வாசிப்பவா;களுக்கு உதவியாயிருக்கும். இதைச் செய்ய இன்னும் காலதாமதாமாகவில்லையென்றே எனக்குப்படுகின்றது.