When I decided to improve my class notes on the "Role of a Community Organizer", I searched my xerox copies of Murray G Ross & Arthur Dunham books, but I could not trace it. I had a xerox copy of Mark S Homans book "Promoting Community Change" presented to our library by Dr. Janaki, our alumni, currently teaching Social Work at California State University....that too I could not trace it. I tried Google images in order to get images to improve the presentation of my notes.
This time I really enjoyed surfing the internet with so much proud..reading the reactions of community organizers towards Sarah Palin's, (Vice Presidential candidate in USA Presidential election), sarcastic comments about the Barak Obama's experience as a community organizer.
Sarah Palin said, as a small town mayor, she is also a community organizer but with real responsibilities. Her statement is like a Tamil proverb " I too am a Pujari, even I can dance like a God (நானும் பூசாரி எனக்கும் சுவாமி ஆட்டமுண்டு என்பது மாதிரி) (the real meaning is "every ass thinks himself worthy to stand with the king's horse).The community organizers of USA united together and torn her into bits and pieces.
The reaction of community organizers were really inspiring. They felt that Sarah Palin has insulted not the community organizers but the American tradition. This made childrens' of community organizers to wore badges "My mammy, my daddy is a community organizer"... couples wore badges "my loving wife. my loving husband is a community organizer"... and singles wore with pride that "I am a community organizer" T shirts printed with Jesus.. Gandhi... Lenin.. Mother Theresa was community organizers.
They were proud in what they wee doing. But what about in our country? The students of social work who have choosen other fields of social work except PMIR are treated as second class citizens even in schools/ departments of social work.
No doubt we normally imitate Americans and take them as our role models. Let us imitate them at least in expressing the feeling of that professional pride ....proud to be a social worker .. community organizer.
1.Social Workers Response 2.I am Community Organizer Feministing .com
3.Community Organizers Fight back 4.In honour of Community organizing
To read more on the Role of a community organizer .. See Resources for Students
Role of a Community Organizer பற்றி என்னிடமிருந்த "சரக்கிகிற்கு" கொஞ்சம் "சுதி" சேர்க்க. என்னிடமிருந்த Murray G Ross, Arthur Dunham புத்தகங்களை (xerox Copy) தேடிய போது, அது சுடப்பட்டு விட்டதை உணர்ந்தேன். நம் கல்லூரியில் படித்து இப்போது அமெரிக்காவில் பேராசிரியையாகப் பணியாற்றி வரும் Dr.Janaki நூலகத்திற்கு அருமையான சில புத்தகங்களைக் கொடுத்தார். அதில் Mark S Homan எழுதிய " Promoting Community Change" என்ற அருமையான புத்தகம். அந்த xerox copy யும் தேட முடியவில்லை. என்னிடமிருந்த குறிப்புகளுக்குப் பொருத்தமான படங்களை இணையத்தில் தேடிய போது தான் "community organization " பற்றிய முக்கிய விவாதத்தை அறிய முடிந்தது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உதவி ஜனாதிபதியாக போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் சாரா பாலின் அவர்கள், ஜனாதிபதியாகப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பரக் ஒபாமா "நான் பல்லாண்டுகள் community organizer ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவன் என்று பெருமையாகச் சொல்ல, அதைக் கிண்டலடிக்கும் முகமாக சாரா பாலின் அவர்கள் பேச, (நானும் பூசாரி எனக்கும் சுவாமி ஆட்டமுண்டு என்பது மாதிரி As a small town mayor I am more than a community organizer என்று சொல்லிவிட) அமெரிக்காவின் ஒட்டுமொத்த சமூகப் பணியாளர்கள், ஒன்று கூடி சாரா பாலினைக் கிழித்து தோரணம் கட்டிவிட்டது தெரிய வந்தது.
community organization பற்றியும் community organizers பற்றியும் எழுதப்பட்ட விதம் கண்ணீர் வரவழைக்க் கூடியதாகவும், பெருமை கொள்ளத்தக்கதாகவும் இருந்தது. என்னுடைய அன்பான தாய், தந்தை community organizers என்று குழந்தைகள் Badges அணிந்து கொள்ள, என்னுடைய மனைவி, கணவன், காதலி "community organizers" என்று பெருமையாக Badges அணிந்து கொள்ள, தனியாட்கள் "I am a community organizer" என்று நெஞ்சை நிமிர்த்த.. இதையெல்லாம் பார்த்த, படித்த போது பெருமையாக, மிகப் பெருமையாக இருந்தது.
இயேசு, காந்தி, லெனின், அன்னை தெரேசா என்று அவர்கள் சொன்ன விதம், நான் அடிக்கடி மாணவர்களிடம் சொல்வது மாதிரி "இது ஒரு ராஜபாட்டை"; மரியாதைக்குரியவர்கள் காலடி பட்டு புனிதமும், ஆசியும் பெற்ற பாதை."தீ" படத்தில் காவல் துறை ஒதுங்கினால் என்ன நடக்கும் என்று சில காட்சிகளைக் காட்டும் போது, அது மிகைபடுத்தபட்டது மாதிரி தெரியும். ஆனால் இந்த அமெரிக்க விவாதத்தில் "community organizer" இல்லாவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்று எழுதப்பட்டிருந்ததைப் படித்த போது, அது உன்ன்மையாகப்பட்டது.
Community Organization" எங்களுக்கு பிழைப்பு மட்டுமல்ல- அதுதான் பெருமை - அதைக் களங்கப்படுத்த முயற்சி செய்தால் ....? சாரா பாலினிர்க்கு எதிரான விவாதம், சத்தம், முஸ்டியை மடக்கியது, உதைக்க காலை உயர்த்தியது... Community Organization is not an orphaned academic discipline and practice என்பது புரிந்தது.
ஆனால் நம் நாட்டிலோ ….?
சாரா பாலின் நக்கலான பேச்சைக் கேட்க,அதைப் பற்றிய விவாதங்களை அறிந்துகொள்ள மேலே கொடுத்துள்ள 5 லிங்க்குகளில் கிளிக் செய்யவும்
Community Organizers Role பற்றி மேலும் படிக்க See Resources for Students
No comments:
Post a Comment